சென்னை வள்ளுவர் கோட்டத்தில் நடைபெற்ற கூட்டத்தில், முதலமைச்சர், காவல்துறை அதிகாரி குறித்து கருணாஸ் பேசிய பேச்சுக்கள் அனைவருக்கும் தெரியும்.
சாதி கலவரத்தை தூண்டும் விதமாகவும் பேசி, அமைதியாக வாழ்ந்து வரும் மக்களிடையே குழப்பத்தையும் சண்டையையும் மூட்ட முயற்சித்தார்.
அவரை கைது செய்ய வேண்டும் என போராட்டங்கள் நடைபெற்றன. இதனையடுத்து அவர் கைது செய்யப்பட்டார்.
மேலும் ஐ.பி.எல். போட்டிகளை எதிர்த்து அனுமதியின்றி போராட்டம் நடத்திய வழக்கிலும் அவர் கைது செய்யப்பட்டார்.
இந்த இரண்டு வழக்குகளில் இருந்தும் அவர் ஜாமீன் பெற்ற நிலையில், மேலும் ஒரு வழக்கில் அவர் மீது கைது நடவடிக்கை பாய இருந்தது.
தேவர் பேரவை அமைப்பின் தலைவரின் காரை சேதப்படுத்திய வழக்கில் அவரை கைது செய்ய நெல்லை புளியங்குடி போலீசார் சென்னை வந்த நிலையில், திடீரென மருத்துவமனையில் அட்மிட் ஆனார் கருணாஸ்.
அவசர சிகிச்சை பிரிவில் இருந்த அவர், தற்போது நார்மல் வார்டிற்கு மாற்றப்பட்டுள்ளார்.
இந்நிலையில் புளியங்குடி வழக்கில் முன் ஜாமீன் கேட்டு, சென்னை உயர்நீதிமன்ற மதுரைக்கிளையில் அவர் தாக்கல் செய்த மனு நாளை விசாரணைக்கு வருகிறது.
அவரது மனு நிராகரிக்கப்பட்டால், கருணாஸ் மீண்டும் கைது செய்யப்படுவார் என எதிர்பார்க்கப்படுகிறது. இதனால் அவரது ஆதரவாளர்கள் பீதியில் உள்ளனர்.
Discussion about this post