கொரோனா தடுப்பு மருந்து பரிசோதனைக்காக, 200 கோவிஷீல்டு மருந்துகள் பூனேவில் இருந்து சென்னை வந்தடைந்தன.
இங்கிலாந்தில் உள்ள ஆக்ஸ்போர்டு பல்கலைக்கழகம் கோவிஷீல்டு என்னும் கொரோனா தடுப்பூசியை கண்டுபிடித்துள்ளது. இந்த தடுப்பூசியை கொண்டு பல்வேறு நாடுகளில் பரிசோதனை நடத்தப்பட்டு வருகிறது. இந்தியாவில் பல்வேறு மாநிலங்களில் மொத்தமாக ஆயிரத்து 600 பேரிடம், கோவிஷீல்டு பரிசோதனை செய்யப்பட உள்ளது. தமிழகத்தை பொறுத்த வரை, சென்னை ராஜிவ்காந்தி அரசு மருத்துவமனை மற்றும் போரூர் ராமச்சந்திரா மருத்துவமனைகளுக்கு அனுமதி வழங்கப்பட்டுள்ளது. இரண்டு மருத்துவமனைகளிலும் தலா 150 பேருக்கு பரிசோதனை செய்யப்பட உள்ளது. இந்நிலையில், முதற்கட்டமாக, 200 கோவிஷீல்டு மருந்துகள் பூனேவில் இருந்து சென்னை வந்தடைந்தன. இந்த பரிசோதனை, அடுத்த வாரம் தொடங்கப்படும் என தகவல் வெளியாகியுள்ளது.
Discussion about this post