ஒசூரில் வருமானம் இல்லாததால், சர்க்கரை நோயால் ஒரு கால் இழந்த தந்தையை, மகளே வீட்டை விட்டு வெளியேற்றிய சம்பவம் பெரும் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.
காரைக்காலில் இருந்து 1983ம் ஆண்டு ஒசூருக்கு வேலை தேடி வந்த கிருஷ்ணசாமிக்கு வயது 72. விபத்தில் மகன் நாகராஜன் உயிரிழக்கவே மகள் ஜெயலட்சுமியுடன் கிருஷ்ணசாமி, சந்திரா தம்பதி வாழ்ந்து வந்துள்ளனர். தனியார் தொழிற்சாலையில் வேலை பார்த்து வந்த கிருஷ்ணசாமிக்கு, சர்க்கரை நோய் அதிகரித்ததன் காரணமாக, கடந்த 2012ம் ஆண்டு வலது கால் முழுமையாக நீக்கப்பட்டுள்ளது. இதற்கு பின், கிருஷ்ணசாமியின் முதியோர் உதவித்தொகையை மட்டும் பெற்றுக்கொள்ளும் மகள் ஜெயலட்சுமி, கிருஷ்ணசாமியை ஆபாச வார்த்தைகளால் திட்டி வந்ததாகவும் கூறப்படுகிறது. இந்நிலையில் வீட்டின் வேலைகள் மற்றும் குழந்தைகளை பார்த்து கொள்வதால், மனைவி சந்திராவை வீட்டில் வைத்து கொண்டு, தன்னை வீட்டை விட்டு வெளியேற்றி விட்டதாக கிருஷ்ணசாமி கண்ணீருடன் தெரிவிக்கிறார்.
நடுத்தெருவில் நிர்கதியாக நிற்கும் தனக்கு, மற்றொரு காலிலும் சர்க்கரை நோய் தீவிரமாக உள்ளதால், யாரேனும் ஆதரவளித்து, உதவிட வேண்டும் என கிருஷ்ணசாமி கோரிக்கை வைத்துள்ளார்.
Discussion about this post