நாமக்கல் மாவட்டம், சேந்தமங்கலத்தில் 75 வயது மூதாட்டி வெட்டிக்கொலை செய்யப்பட்ட வழக்கில், அவரது மகனுக்கு போலீசார் வலைவீசியுள்ளனர். நாமக்கல் மாவட்டம், சேந்தமங்கலம் அருகே உள்ள சின்னப்பள்ளம்பாறை ஆலமரம் பகுதியை சேர்ந்தவர் விவசாயி வேலுசாமி. கடந்த 15 வருடங்களாக மனைவியை பிரிந்து தாய் பவளாயியுடன் வசித்து வந்தார். இந்த நிலையில் வேலுசாமி நேற்று நள்ளிரவு நாமக்கல்லில் குடியிருக்கும் தனது மகன் வீட்டிற்கும், கருங்கல்பாளையத்தில் குடியிருக்கும் தனது மகள் வீடிற்கும் நேரில் சென்று, தனது தாய் பாவளாயியை யாரோ அரிவாளால் வெட்டிக்கொலை செய்து விட்டதாகவும், ”உங்களுக்கு போன் செய்தேன் நீங்கள் இருவரும் எடுக்க வில்லை ஆகையால் நோரில் வந்து கூறினேன்” என்று தெரிவித்துள்ளார்.
இதனால் அதிர்ச்சியடைந்த மூதாட்டி பவளாயின் பேரன் வீரக்குமாரும், பேத்தி கலைவாணியும் உடனடியாக சின்னபள்ளம்பாறையில் உள்ள தோட்டத்து வீட்டிற்கு சென்று பார்த்துள்ளனர். அப்போது பாட்டி பவளாயி தலையில் பலத்த வெட்டு காயத்துடன் இரத்த வெள்ளத்தில் இறந்து கிடந்தார். இதை கண்ட பேரன் வீரகுமார் சேந்தமங்கலம் காவல் நிலையத்தில் புகார் கொடுத்தார். புகாரின் அடிப்படையில் காவல் துறையினர் பவளாயி உடலை மீட்டு விசாரணையை தொடங்கினர். அக்கம் பக்கதில் இருப்பவர்களிடம் விசாரணை நடத்தினர். மேலும் கொலையான பேரனிடமும், பேத்தியிடமும் விசாரணை நடத்தினர், அப்போது தனது தகப்பனார் பாட்டி பவளாயியை யாரோ கொலை செய்துவிட்டனர் என்று கூறி தலைமறைவாகி உள்ளார் என்று போலீசாரிடம் கூறினார்.
மேலும் நேற்று வீட்டில் இருந்த பாட்டி பவளாயியை பேரன் வீரக்குமார் பார்த்து, அவருக்கு செலவுக்கு பணம் கொடுத்துள்ளார். இதுபோன்று பணத்தை கொடுத்தால், பவளாயியின் மகன் வேலுசாமி தனது மகன் கொடுத்து சென்ற பணத்தை தருமாறு தகராறு செய்வது வழக்கம். இதனால் பணத்தகறாரில் வேலுசாமியே தாயை கெலை செய்து விட்டு தலைமறைவாகி விட்டரா? அல்லது வேறு யாராவது பழி வாங்கும் நோக்கில் கொலை செய்திருப்பார்களா? என்ற கோணத்தில் சேந்தமங்கலம் போலீசார் விசாரணை செய்து வருகின்றனர். மேலும் கொலை நடந்த இடத்திற்கு போலீஸ் மோப்ப நாய் வரவழைக்கப்பட்டது. அது வீட்டின் அருகே சுற்றிவிட்டு 1 கிலோ மீட்டர் துரத்திற்கு ஓடி நின்றது. இருப்பினும் போலீசார் தொடர்ந்து கொலையாயை தேடி வருகின்றனர். சேந்தமங்கலத்தில் மூதாட்டி கொலை செய்யப்பட்ட சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.
Discussion about this post