சித்த மருத்துவர் தணிகாச்சலத்தை குண்டர் சட்டத்தில் அடைக்க பிறப்பிக்கப்பட்ட உத்தரவுக்கு எதிரான வழக்கில், மத்திய ஆயுஷ் அமைச்சகம் சார்பில் துறை ரீதியாக எவ்வளவு நிதி ஒதுக்கப்பட்டது என்பது குறித்து மனு தாக்கல் செய்ய நீதிமன்றம் உத்தரவிட்டிருந்தது. இந்நிலையில், நீதிபதிகள் கிருபாகரன், வேலுமணி அமர்வு முன்பு, வழக்கு மீண்டும் விசாரணைக்கு வந்தது. அப்போது மத்திய அரசு தரப்பில் தாக்கல் செய்யப்பட்ட மனுவில், கடந்த10 ஆண்டுகளில் ஆயூர்வேத துறைக்கு மூன்றாயிரம் கோடி நிதி ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது என்றும், சித்த மருத்துவத்திற்கு 437 ரூபாய் கோடி ரூபாய் நிதி ஒதுக்கப்பட்டுள்ளதாகவும் குறிப்பிடப்பட்டுள்ளது. மனுவை வாசித்த நீதிபதிகள் சித்த மருத்துவத் துறையில் குறைந்த நிதி ஒதுக்கிப்பட்டுள்ளது துரதிருஷ்டவசமானது என அதிருப்தி தெரிவித்தனர். மேலும், ஆயுஷ் அமைச்சகத்தின் பெயரில் இருந்து, சித்த மருத்துவத்தை குறிப்பிடும் ‘எஸ்’ என்ற எழுத்தை நீக்கிவிடலாமே என கண்டனம் தெரிவித்தனர். மேலும், இது குறித்து மத்திய அரசு விளக்கம் அளிக்க உத்தரவிட்ட நீதிபதிகள் வழக்கை அடுத்த வாரத்திற்கு ஒத்திவைத்தனர்.
Discussion about this post