இதனையடுத்து நோய் தொற்றால் பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கை 3 லட்சத்து 61 ஆயிரத்து 435ஆக அதிகரித்துள்ளது. நோய் தொற்றால் பாதிக்கப்பட்ட 5 ஆயிரத்து 986 பேரில் 3 ஆயிரத்து 629 பேர் ஆண்களும், 2 ஆயிரத்து 357 பேர் பெண்களும் ஆவர். தலைநகர் சென்னையில் ஒரே நாளில் ஆயிரத்து 177 பேருக்கு கொரோனா தொற்று உறுதிச் செய்யப்பட்டுள்ளதை அடுத்து, பாதிக்கப்பட்டோரின் எண்ணிக்கை 1 லட்சத்து 21 ஆயிரத்து 450ஆக உயர்ந்துள்ளது. சென்னை தவிர்த்து பிற மாவட்டங்களில் நோய் தொற்றால் பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கை நாளுக்கு நாள் அதிகரித்து வருகிறது. அதன்படி, செங்கல்பட்டு மாவட்டத்தில் 462 பேருக்கும், கோவையில் 397 பேருக்கும், திருவள்ளூரில் 393 பேருக்கும் நோய் தொற்று உறுதிச் செய்யப்பட்டுள்ளது. சேலத்தில் 359 பேருக்கும், காஞ்சிபுரத்தில் 291 பேருக்கும் கொரோனா தொற்று உறுதிச் செய்யப்பட்டுள்ளது. ஒரே நாளில் 5 ஆயிரத்து 742 பேர் குணமடைந்துள்ள நிலையில், தமிழகத்தில் கொரோனா பாதிப்பிலிருந்து குணமடைந்தோரின் எண்ணிக்கை 3 லட்சத்து ஆயிரத்து 913ஆக உயர்ந்துள்ளது. குணமடைந்தோரின் சதவீதம் 83 புள்ளி 53 சதவீதமாக அதிகரித்துள்ளது. மேலும், 116 பேர் உயிரிழந்த நிலையில், தற்போது 53 ஆயிரத்து 283 பேர் சிகிச்சைப் பெற்று வருவதாக சுகாதாரத்துறை தெரிவித்துள்ளது.
Discussion about this post