வேலூர் உட்பட 4 மாவட்டங்களின் வளர்ச்சி பணிகள் குறித்து முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி நாளை ஆய்வு செய்கிறார்.
மாவட்டங்களில் மேற்கொள்ளப்படும் கொரோனா தடுப்பு நடவடிக்கைகள் மற்றும் வளர்ச்சி திட்டப் பணிகள் குறித்து முதலமைச்சர் நேரில் ஆய்வு செய்து வருகிறார். அந்த வகையில், நாளை வேலூர், திருப்பத்தூர், ராணிப்பேட்டை மாவட்டங்களில் எடுக்கப்பட்டுள்ள கொரோனா தடுப்பு நடவடிக்கைகள் மற்றும் வளர்ச்சி திட்டப் பணிகள் குறித்து அதிகாரிகளிடம் கேட்டறிகிறார். விவசாயிகள், தொழில் துறையினருடன் கலந்துரையாடும் முதலமைச்சர், மாலையில் தருமபுரி மாவட்டத்திற்கு சென்று வளர்ச்சி பணிகளை ஆய்வு செய்கிறார். அதன்பிறகு 21ஆம் தேதி நாமக்கல் மாவட்டத்திற்கு செல்லும் முதலமைச்சர் அங்கு வளர்ச்சி பணிகளை ஆய்வு செய்கிறார்.
Discussion about this post