பி எம் கேர்ஸ் நிதியை தேசிய பேரிடர் நிவாரண நிதிக்கு மாற்றுவதற்கு உத்தரவிட முடியாது என உச்ச நீதிமன்றம் தெரிவித்தது. கொரோனா வைரசை தடுக்கும் பணிகளுக்காக, மத்திய அரசு பிஎம் கேர்ஸ் நிதியை உருவாக்கி உள்ளது. இதற்காக தனி நபர்கள், நிறுவனங்கள் மூலம் பெறப்பட்ட நன்கொடையை, தேசிய பேரிடர் நிவாரண நிதிக்கு மாற்றக் கோரி, சிபிஐஎல் எனும் தொண்டு நிறுவனம், உச்ச நீதிமன்றத்தில் பொதுநல மனு தாக்கல் செய்தது. அதில், தேசிய பேரிடர் மேலாண்மை சட்டத்திற்கு முரணாக பிஎம் கேர்ஸ் இருப்பதாக கூறப்பட்டிருந்தது. இந்த வழக்கின் வாதங்கள் முடிவைடைந்த நிலையில், தீர்ப்பு வழங்கப்பட்டது. அப்போது, பிஎம் கேர்ஸ் நிதியை தேசிய பேரிடர் நிவாரண நிதிக்கு மாற்றுவதற்கு உத்தரவிட மறுத்த நீதிபதிகள், மனுதாரரின் மனுவை தள்ளுபடி செய்தனர். அதோடு, தேசிய பேரிடர் நிவாரண நிதிக்கு மாற்றுவது பொருத்தமானது என்று தோன்றினால், அரசு அதை மாற்றலாம் என்றும் நீதிபதிகள் தெரிவித்தனர்.
Discussion about this post