கவலைகளை மறக்கவும், கண்களுக்கு விருந்து படைக்கவும், இயற்கை அழகு எங்கெங்கும் விரிந்து கிடக்கிறது.. அந்த வகையில், பச்சை கம்பளம் விரித்தும், பனி படர்ந்தும் அன்புடன் வரவேற்கிறது, அந்தோரா (Andorra )… அந்த நாட்டின் சிறப்பு என்ன..? பிரான்ஸ் மற்றும் ஸ்பெயின் நாடுகளிடையே பிரனிஸ் மலைகளின் கிழக்குப் பகுதியில் அமைந்துள்ள சிறிய நாடு அந்தோரா பிரின்சிபாலிடி ( Andorra). முன்பு தனிமைப்படுத்தப்பட்டு இருந்த இந்தநாடு சுற்றுலாத்துறையின் காரணமாக இப்போது வளமிக்க நாடாக விளங்குகிறது. அதே போல், வரிகள் மிகக் குறைவு என்பதால், வெளிநாட்டு முதலீடுகள் அதிகமாக உள்ளது. இயற்கை சூழலில் உள்ள இந்த நாட்டில் மக்கள் தொகை லட்சத்தில் மட்டுமே உள்ளது. இதனால், சுத்தமான காற்று, சுகாதாரமான குடிநீர், சத்தான உணவுகள் என மக்கள் ஆரோகியத்துடனும், மகிழ்ச்சியுடனும் வாழ்கின்றனர். இங்கு வாழ்பவர்களின் சராசரி ஆயுள் காலம் 84 என கூறப்படுகிறது. லத்தின் கலந்த காத்தலான் மொழியை இங்குள்ள மக்கள் பேசுகின்றனர். இது ஐபேரிய, பஸ்கு மொழிகளின் வழித்தோன்றியது என ஆராய்ச்சியாளர்கள் கூறுகின்றனர். சிறிய நகரம் போல் உள்ள அந்தோரா நாட்டில், பனிச்சறுக்கு மிகப்பிரபலம், பல்வேறு நாடுகளில் இருந்து வந்து குவியும், சுற்றுலா பயணிகள் இயற்கையின் பேரழகை ரசித்து பார்ப்பதுடன் விளையாட்டு போட்டிகளிலும் ஆர்வம் செலுத்துகின்றனர்.
Discussion about this post