ஈரானுடன் அனைத்து நாடுகளும் வர்த்தக உறவுகளை துண்டித்துக் கொள்ளவேண்டும் என அமெரிக்கா வற்புறுத்தி வருகிறது. குறிப்பாக அந்த நாட்டிடம் இருந்து எரி பொருளை வாங்க கூடாது என கூறி வருகிறது.
அப்படி நடந்தால் உலகம் முழுவதும் பெட்ரோல்- டீசல் விலை தாறுமாறாக உயரும் என எதிர்பார்க்கப்படுகிறது. இதனிடையே ஈரான் வழங்கி வரும் அதே அளவு எரிபொருளை சவுதி அரேபியா கூடுதலாக உற்பத்தி செய்ய வேண்டும் என அமெரிக்கா அந்த நாட்டிடம் கூறியது. ஆனால் சவுதி அரேபியா இதற்கு மறுத்தது. இதனால் கோபமடைந்த அமெரிக்கா , நாங்கள் இல்லாமல் ஒரு வாரம் உங்களால் தாக்கு பிடிக்க முடியுமா என்று மிரட்டியது.
இந்தநிலையில் திடீரென அமெரிக்காவின் மிரட்டலுக்கு சவுதி அரேபியா பணிந்துள்ளது. இதுகுறித்து சவுதி அரேபிய இளவரசர் முகமது பின் சல்மான் ,அமெரிக்க அதிபர் ட்ரம்புடன் இணைந்து பணியாற்றவே நாங்கள் மிகவும் விரும்புகிறோம் என கூறியுள்ளார். இருநாடுகளும் இணைந்து மத்திய கிழக்கில் பல சாதனைகளை புரிந்துள்ளன. தீவிரவாதம், ஐஎஸ் நடவடிக்கைகளுக்கு முற்றுப்புள்ளி வைத்துள்ளோம். நல்ல நண்பர்களிடையே சில நேரங்களில் மாற்று கருத்து எழத்தான் செய்யும் என்று அவர் கூறியுள்ளார்.
குடும்பங்களில் கூட மாற்றுக் கருத்து எழும். இதையும் அதுபோல தான் நாங்கள் எண்ணுகிறோம். ஈரான் கச்சா எண்ணெய் இல்லாததால் ஏற்படும் இழப்புகளை இனிமேல் சவுதி அரேபியா ஈடுகட்டும் என முகமது பின் சல்மான் தெரிவித்துள்ளார்.
Discussion about this post