தென் தமிழகத்தில் முதன் முறையாக மதுரை அரசு ராஜாஜி மருத்துவமனையில் 20 லட்சம் ரூபாய் மதிப்பில் குறட்டை பிரச்சனையை கண்டறியும் சிகிச்சை பிரிவு தொடக்கப்பட்டுள்ளது. மாவட்ட ஆட்சியரின் நமக்கு நாமே திட்ட நிதியில், ராஜாஜி மருத்துவமனையில் தூக்கத்தின் போது ஏற்படும் குறட்டை மற்றும் மூச்சு திணறலுக்கான காரணங்களை துல்லியமாக கண்டறிய உதவும் புதிய சிகிச்சை பிரிவை மருத்துவமனை முதல்வர் சங்குமணி தொடங்கிவைத்தார். முதலமைச்சர் காப்பீட்டு திட்டத்தின் கீழ் இலவசமாக பரிசோதனை செய்து கொள்ளலாம் என்று அறிவிக்கப்பட்டுள்ளது.
Discussion about this post