சென்னையில், குப்பை சேகரித்து அதன் மூலம் வாழ்க்கை நடத்தி வந்த மூதாட்டி, வயது மூப்பு காரணமாக உயிரிழந்த நிலையில், அவரது குடிசையில் 2 லட்சத்துக்கும் மேல் ரூபாய் நோட்டுகள் கண்டெடுக்கப்பட்டது ஆச்சர்யத்தை ஏற்படுத்தியுள்ளது.
ஓட்டேரியை அடுத்த சத்தியவாணிமுத்து நகரில், ராஜேஸ்வரி, மகேஸ்வரி மற்றும் பிரபாவதி ஆகிய மூன்று மூதாட்டிகள் குடிசையில் வசித்து வந்தனர். பிளாஸ்டிக் மற்றும் குப்பைகளை பொறுக்கி, அதனை விற்று வாழ்ந்து வந்தனர். கடந்த மாதம் பிரபாவதி உயிரிழந்து தெருவில் இருந்ததை அறிந்த, அப்பகுதி காவல்துறை ஆய்வாளர் ராஜேஸ்வரி, காவலர்கள் உதவியுடன் அடக்கம் செய்தார். இந்நிலையில், வீட்டில் குப்பைகள் இருந்ததால், இரு மூதாட்டிகளும் சாலையில் தங்கியிருந்தனர். இதனையறிந்த காவல்துறையினர் லாரிகள் மூலம் குப்பையை அகற்றும் போது, சுமார் 2 லட்சத்துக்கும் அதிகமான பணம் இருப்பது தெரியவந்தது. செல்லாத நோட்டுகளான பழைய 500 ரூபாய் 1000 ரூபாய் நோட்டுகளும், சுமார் 40 ஆயிரம் வரை இருந்துள்ளது. இரு மூதாட்டிகளுக்குமே தெரியாமல், லட்சக்கணக்கில் பணம் இருந்தது, அப்பகுதி மக்களிடையே வியப்பை ஏற்படுத்தியுள்ளது.
Discussion about this post