மதுரையில் 248 பிரம்மாண்ட தூண்களுடன் கம்பீரமாய் காட்சியளிக்கும் மன்னர் திருமலை நாயக்கர் அரண்மனையில், சீரமைப்பு பணிகள் தீவிரமாக நடைப்பெற்று வருகிறது.
மதுரையின் வரலாற்றுச் சிறப்பு மிக்க அடையாளங்களுள் ஒன்றாகத் திகழும் திருமலை நாயக்கர் அரண்மனை சுற்றுலா பயணிகளை ஈர்க்கும் இடங்களில் ஒன்றாக உள்ளது. இந்நிலையில், ஆசிய வளர்ச்சி வங்கி நிதியுதவி வழங்கியதையடுத்து அரண்மனையில் 3 கோடி ரூபாய் செலவில் சீரமைப்பு பணிகள் நடைப்பெற்று வருகிறது. ஊரடங்கு காரணமாக நிறுத்தி வைக்கப்பட்டிருந்த பணிகள், தற்போது மீண்டும் தொடங்கி நடைபெற்று வருகின்றன. புறாக்களின் எச்சங்களால் மஹாலில் உள்ள தூண்கள் பொலிவிழப்பதை தடுக்கும் வகையில், திறந்த வெளி பகுதிகளில் கம்பி வலைகள் அமைக்கப்பட்டுள்ளது. விரைவில் பணிகள் முடிந்து மஹால் புதிய பொலிவுடன் காட்சியளிக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது.
Discussion about this post