திருச்சியில் சமூக இடைவெளியை பின்பற்றாமலும், முகக்கவசம் அணியாமலும் திமுக எம்.எல்.ஏ ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டதால் பரபரப்பு ஏற்பட்டது. ஆர்.ஆர்.பி தேர்வில் வெற்றி பெற்றவர்களில், வடமாநிலத்தைச் சேர்ந்தவர்கள் அதிகமானோர் பொன்மலை ரயில்வே பணிமனையில் பணி அமர்த்தப்பட்டதாக குற்றச்சாட்டு எழுந்தது. இதனைக்கண்டித்து திமுக எம்.எல்.ஏ அன்பில் மகேஸ் பொய்யாமொழி தலைமையில் நடைபெற்ற ஆர்ப்பாட்டத்தில், விதிமுறைகள் மீறப்பட்டது. இதனிடையே இந்த ஆர்ப்பாட்டத்தில் கலந்து கொண்ட பயிற்சி மாணவர்கள், திமுக எம்.எல்.ஏ அன்பில் மகேஷ் பொய்யாமொழி முன் தரையில் அமர்ந்தவாறு, தங்களின் வேலை வாய்ப்பை தட்டி பறித்ததே திமுக ஆதரவு தொழிற்சங்கம் தான் என குற்றம்சாட்டினர். குறுக்கு வழியில் நீதிமன்றத்தில் வழக்கு போட்டு தொழிலாளர்களின் வாரிசுகளுக்கும், பயிற்சி முடித்த இளைஞர்களுக்கும் வேலை கிடைக்காமல் செய்தது எஸ்.ஆர்.எம்.யூ- தான் என விமர்சித்தனர்.
Discussion about this post