கொரோனா வைரசை குணப்படுத்துவதாகக் கூறி, மக்களின் அச்சத்தை பயன்படுத்தி லாபம் ஈட்ட முயன்றதாகக் பதஞ்சலி நிறுவனத்துக்கு 10 லட்சம் ரூபாய் அபராதம் விதித்து சென்னை உயர் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.
சென்னை திருவான்மியூரைச் சேர்ந்த சேர்ந்த நிறுவனம் கனரக இயந்திரங்களை சுத்தம் செய்வதற்கான ரசாயன கலவையை கொரோனில் 92பி, கொரோனில் 213எஸ்பிஎல் என்ற பெயரில் தயாரித்து வருகிறது. கொரோனில் என்ற பெயரில் வணிகச் சின்னத்தையும் பதிவு செய்துள்ளது. இந்நிலையில் கொரோனாவுக்கு மருந்து கண்டுபிடித்துள்ளதாகவும், அதற்கு கொரோனில் எனவும் பெயர் சூட்டியுள்ளதாகவும் கூறி, பதஞ்சலி நிறுவனமும், திவ்யா யோக் மந்திர் அறக்கட்டளையும் விளம்பரங்களை வெளியிட்டுள்ளதாக சென்னையைச் சேர்ந்த நிறுவனம் உயர்நீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்தது.
இந்த வழக்கில் பதஞ்சலி நிறுவனம் தயாரித்துள்ள கொரோனில் மருந்து என்பது எதிர்ப்பு சக்தி மருந்துதானே தவிர, கொரோனாவை குணப்படுத்தும் மருந்து கிடையாது எனவும் நீதிமன்ற உத்தரவில் குறிப்பிடப்பட்டுள்ளது. மேலும் கொரோனில் என்ற பெயரில் பயன்படுத்த பதஞ்சலி நிறுவனத்துக்கு தடை விதித்த உயர்நீதிமன்றம், 10 லட்சம் ரூபாய் அபராதம் விதித்தது.
Discussion about this post