உலகளவில் தங்கம் இறக்குமதி செய்வதில் இந்தியாவும் சீனாவுமே மாறி மாறி முதலிடம் வகிக்கிறது. இந்தியாவை பொருத்தவரை கடந்த ஆண்டு சுமார் 900 டன் தங்கத்தை இறக்குமதி செய்துள்ளதாக தங்க வர்த்தகர்கள் தெரிவிக்கின்றனர். வளர்ந்த நாடுகளின் தேவையை விட, வளர்ந்துவரும் நாடான இந்தியா தங்கத்தை அதிகமாக இறக்குமதி செய்வதற்கான காரணம், வளர்ந்த நாடுகள் தங்கத்தை முதலீட்டு பொருளாக பார்ப்பதும், இந்தியர்கள் ஆபரணமாக பார்ப்பதுமே காரணம் என்கின்றனர் தங்கம் வர்த்தகர்கள்.சர்வதேச அளவில் பார்க்கும்போது, இந்தியாவில் மட்டுமே தங்கத்தின் விலை இந்த அளவு உயர்ந்துள்ளது.
சுமார் 9 ஆண்டுகளுக்கு முன் ஒரு அவன்ஸ் தங்கத்தின் விலை 1950 டாலரில் இருந்து, அவ்வப்போது ஏற்ற இறக்கத்தை சந்தித்து இன்றும் அதே 1900 டாலருக்குள்ளாகவே தங்கம் விற்பனையாகிறது. ஆனால் 9 ஆண்டுகளுக்கு முன் இந்தியாவில் 16 ஆயிரம் ரூபாய்க்கு விற்பனை செய்யப்பட்ட ஒரு சவரன் ஆபரண தங்கம், இன்று 41 ஆயிரம் ரூபாய்கு விற்பனையாகிறது. இது குறித்து நியூஸ் ஜெ. வுக்கு பேட்டியளித்த தங்க நகை விற்பனையாளர் சங்க நிர்வாகி சாந்தகுமார், சர்வதேச அளவில் தங்கத்தின் விலை உயராத நிலையில் இந்தியாவில் தங்கத்தின் விலை உயர, அமெரிக்க டாலருக்கு நிகரான இந்திய ரூபாயின் வீழ்ச்சியே முக்கிய காரணம் என்றார்.
Discussion about this post