சென்னை மற்றும் புறநகர் பகுதிகளில் நேற்று இரவு முழுவதும் பரவலாக மழை பெய்தது.
நுங்கம்பாக்கம், தேனாம்பேட்டை, தியாகராய நகர், சைதாப்பேட்டை, கிண்டி உள்ளிட்ட பகுதிகளில் மிதமான மழை பெய்தது. இதேபோல், பெரம்பூர், ஓட்டேரி, அயனாவரம், மாதவரம், வியாசர்பாடி, திருவொற்றியூர், ராயபுரம் பகுதிகளிலும் கனமழை பெய்தது. இரவு நேரத்தில் மழை பெய்ததால், சென்னை மக்கள் மகிழ்ச்சி அடைந்தனர். இதேபோல், புறநகர் பகுதிகளான ஆவடி, பட்டாபிராம், தாம்பரம், பெருங்களத்தூர், பூவிருந்தவல்லி, செங்குன்றம் உள்ளிட்ட இடங்களிலும் பரவலாக மழை பெய்தது.
திருவண்ணாமலை மாவட்டம் செங்கம் சுற்று வட்டாரப்பகுதிகளில், இடி மின்னலுடன் கூடிய மழை பெய்தது. திடீரென பெய்த மழையால், சாலைகளில் மழைநீர் வெள்ளம் போல் ஓடியது. கீழ்பென்னாத்தூர், மங்கலம், வேட்டவலம், வேடநத்தம், கானலாபாடி, சோமசிபாடி, கழிக்குளம், கருங்காலிகுப்பம், உள்ளிட்ட பகுதிகளிலும் பலத்த காற்றுடன் மழை பெய்தது. ஆடிப்பெருக்கு தொடங்கிய நிலையில், நெல் பயிரிட இந்த மழை பயனுள்ளதாக இருக்கும் என விவசாயிகள் மகிழ்ச்சியுடன் தெரிவித்தனர்.
Discussion about this post