தமிழகத்தில் இன்று முதல் விலையில்லா பாட புத்தகங்கள் மற்றும் புத்தகப் பைகள் பள்ளி மாணவர்களுக்கு வழங்கப்பட உள்ளது.
இது தொடர்பாக பள்ளிக்கல்வித்துறை இயக்குனர் கண்ணப்பன் அனைத்து மாவட்ட கல்வி அதிகாரிகள், முதன்மை கல்வி அலுவலர்கள் மற்றும் வட்டார கல்வி அலுவலர்கள் ஆகியோருக்கு சுற்றறிக்கை அனுப்பியுள்ளார். அதில், அரசு மற்றும் அரசு உதவி பெறும் பள்ளிகளில் 2 முதல் 5ஆம் வகுப்பு மாணவர்களுக்கும், 7 மற்றும் 8 ஆம் வகுப்பு மாணவர்களுக்கும், இன்று முதல் பாடப் புத்தகங்கள் மற்றும் புத்தகப் பை வழங்க வேண்டும் என்று குறிப்பிடப்பட்டுள்ளது. 7 மற்றும் 8ஆம் வகுப்பு மாணவர்களுக்கு முதலில் புத்தகங்களை வழங்க வேண்டும் என்றும், ஒரு மணிநேரத்திற்கு 20 மாணவர்கள் வீதம், சமூக இடைவெளி விட்டு நிற்க வைத்து புத்தகங்களை வழங்க தலைமை ஆசிரியர்கள் நடவடிக்கை எடுக்க வேண்டுமென அறிவுறுத்தப்பட்டுள்ளது. புத்தகங்கள் வாங்க வரும் போது பெற்றோர்கள் மற்றும் மாணவர்கள் கட்டாயம் முகக் கவசம் அணிய வேண்டும் எனவும் அறிவுறுத்தப்பட்டுள்ளது.
Discussion about this post