திருச்சியில் கொரோனா பரிசோதனை முடிவுகளை தவறாக வெளியிட்ட தனியார் பரிசோதனை மையம் செயல்பட தடை விதிக்கப்பட்டுள்ளது. திருச்சி உறையூர் பகுதியில், செயல்படும் தனியார் பரிசோதனை மையம் கூடுதல் பணம் வசூல் செய்வதுடன், தனியார் மருத்துவமனைகள் பயன்பெறும் வகையில், பரிசோதனை முடிவுகளை மாற்றி வழங்குவதாக குற்றச்சாட்டு எழுந்தது. இங்கு, கொரோனா பரிசோதனைக்காக சென்ற பலருக்கு, நோய் தொற்று இருப்பதாக தவறான பரிசோதனை முடிவுகள் அளிக்கப்பட்டன. இப்பரிசோதனை மையத்தில் கொரோனா பாதிப்பு இருப்பதாக உறுதி செய்யப்பட்ட நபர்களுக்கு, அரசு மருத்துவமனையில் மேற்கொண்ட பரிசோதனையில் நோய் தொற்று இல்லை என்பது தெரியவந்தது. இதுதொடர்பாக இம்மையத்துக்கு 5 நாட்கள் தடை விதிக்கப்பட்ட நிலையில், மீண்டும் புகார் எழுந்தது. இந்நிலையில் மறு அறிவிப்பு வரும் வரை, பரிசோதனை மையம் இயங்க தடை விதிப்பதாக திருச்சி மாநகராட்சி ஆணையர் சிவசுப்பிரமணியன் உத்தரவிட்டுள்ளார்.
Discussion about this post