சங்க இலக்கியங்களை பாடலாக வெளியிட விரும்புவதாக ஏ.ஆர்.ரஹ்மான் தெரிவித்துள்ளார். ஏ.ஆர்.ரஹ்மான் இசையில் கடைசியாக தமிழில் பிகில் திரைப்படம் ரிலீசானது. இப்போது இந்தியில் தில் பெச்சாரா ரிலீசாகி உள்ளது. பாலிவுட் மட்டுமல்லாமல் ஆங்கிலப் படங்களுக்கும் இசையமைத்து வரும் ஏ.ஆர்.ரஹ்மானை ஒரு வலைதளச் சேனலுக்காக இயக்குநர் விக்னேஷ் சிவன் நேர்க்காணல் செய்தார். அப்போது, ரோஜா திரைப்படத்திலிருந்து தன்னுடைய இசைப்பயணம் பற்றி பல்வேறு விஷயங்களை பகிர்ந்த ஏ.ஆர்.ரஹ்மான், சிலப்பதிகாரம் போன்ற சங்க இலக்கியங்களை பாடல் வடிவில் கொடுக்கும் திட்டம் உள்ளதாக தெரிவித்தார். சங்க இலக்கியம் தொடர்பான படங்களில் நயன்தாரா போன்ற நடிகைகள் நடித்தால் நன்றாக இருக்கும் என்றும் ரஹ்மான் தெரிவித்தார். மேலும், மதங்களைக் கடந்த ஒரு வெளி உள்ளது என்றும், அது மிகவும் அழகானது என்றும் ஏ.ஆர்.ரஹ்மான் தெரிவித்துள்ளார். அங்குதான் செல்ல வேண்டுமென்றும், அப்படித்தான் எல்லோரையும் பார்க்க விரும்புவதாகவும், அது நிறைவான மகிழ்ச்சியளிக்கும் எனவும் ஏ.ஆர்.ரஹ்மான் தெரிவித்துள்ளார்.
Discussion about this post