தமிழ்நாட்டில் கொரோனா தொற்றால் பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கை, ஒரு லட்சத்து 86 ஆயிரத்து 492 ஆக உயர்ந்துள்ளதாக சுகாதாரத்துறை தெரிவித்துள்ளது. மேலும் 5 ஆயிரத்து 849 பேருக்கு நோய் தொற்று ஏற்பட்டுள்ளதாகவும், இதில் 3 ஆயிரத்து 481 பேர் ஆண்கள் என்றும், 2 ஆயிரத்து 368 பேர் பெண்கள் என்றும் சுகாதாரத்துறை கூறியுள்ளது. சென்னையை பொறுத்த வரையில் தொற்றால் பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கை 89 ஆயிரத்து 561 ஆக உயர்ந்துள்ளதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது. கொரோனா வைரஸ் பாதிப்பில் இருந்து ஒரே நாளில் 4 ஆயிரத்து 910 பேர் குணமடைந்துள்ளதால், மீண்டோர் எண்ணிக்கை ஒரு லட்சத்து 31 ஆயிரத்து 583 ஆக உயர்ந்துள்ளது. மேலும், குணமடைந்தோர் சதவீதம் 70 புள்ளி 56 சதவீதமாக அதிகரித்துள்ளது.
சென்னையில் பாதிப்பு குறைந்து வரும் நிலையில், பிற மாவட்டங்களில் கொரோனா தொற்று அதிகரித்து வருகிறது. அதன்படி, திருவள்ளூரில் 430 பேரும், ராணிப்பேட்டையில் 414 பேரும், விருதுநகரில் 363 பேரும், காஞ்சிபுரத்தில் 325 பேரும் புதியதாக நோய் தொற்றால் பாதிக்கப்பட்டுள்ளனர். கொரோனா காரணமாக 74 பேர் உயிரிழந்தனர். மருத்துவர் வடிவேலன் தலைமையில் அமைக்கப்பட்ட குழு அரசிடம் அறிக்கையின்படி விடுபட்ட 444 மரணங்கள் கொரோனா உயிரிழப்பு பட்டியலில் சேர்க்கப்பட்டுள்ளதால், பலியானோர் எண்ணிக்கை 3 ஆயிரத்து 144-ஆக உயர்ந்துள்ளது.
Discussion about this post