கோவேக்ஸின் தடுப்பு மருந்தை மனிதர்களுக்கு செலுத்தி பரிசோதிக்கும் பணிகள் 6 மாதங்கள் வரை நீடிக்கும் என மருத்துவர் குழு தெரிவித்துள்ளது. சென்னையை அடுத்த காட்டாங்குளத்தூரில் உள்ள தனியார் மருத்துவ கல்லூரி மற்றும் ஆராய்ச்சி மையத்தில் கொரோனா தடுப்பு மருந்தை மனித உடலில் செலுத்தும் முதற்கட்ட பணி தொடங்கியுள்ளது. பாரத் பயோடெக் நிறுவனத்தின் கோவேக்சின் தடுப்பு மருந்தை மனிதர்களுக்கு பரிசோதனை செய்ய காட்டாங்கொளத்தூரில் உள்ள தனியார் மருத்துவமனைக்கு ஐ.சி.எம்.ஆர். அனுமதியளித்தது. இதனைத்தொடர்ந்து கொரோனா தடுப்பு மருந்தை மனித உடலில் செலுத்தும் பணி தொடங்கியுள்ளது. இன்று 2 பேருக்கு தருப்பூசி செலுத்தப்பட்டுள்ளது. இதுதொடர்பாக செய்தியாளர்களை சந்தித்த மருத்துவக் குழுவினர், கோவேக்ஸின் தடுப்பு மருந்தை மனிதர்களுக்கு செலுத்தி பரிசோதிக்கும் பணிகள் 6 மாதங்கள் வரை நீடிக்கும் என்றும், முதல் 3 மாதத்தில் திருப்திகரமான முடிவுகள் கிடைக்கும் பட்சத்தில் தடுப்பு மருந்து உற்பத்தி பணி தொடங்கும் எனவும் தெரிவித்தனர்.
Discussion about this post