குடும்ப அட்டைதாரர்களுக்கு ரேஷன் கடைகளில் விலையில்லா முகக் கவசம் விரைவில் வழங்கப்படும் என, வருவாய்த்துறை அமைச்சர் ஆர்.பி.உதயகுமார் தெரிவித்துள்ளார். சென்னை திருவொற்றியூர் மண்டல அலுவலகத்தில் தன்னார்வலர்களுக்கு அமைச்சர் ஆர்.பி.உதயகுமார் முகக் கவசம், கபசுர குடிநீர் ஆகியவற்றை வழங்கினார். பின்னர் செய்தியாளர்களிடம் பேசிய அவர், கொரோனா பாதிப்பால் உலக நாடுகளில் பொருளாதாரம் வீழ்ச்சி அடைந்துள்ளதாகவும், தமிழ்நாட்டில் தொழில் வளர்ச்சியை மேம்படுத்த முன்மாதிரியான நடவடிக்கைளை முதலமைச்சர் மேற்கொண்டு வருவதாகவும் தெரிவித்தார். ஞாயிற்றுக்கிழமை முழு ஊரடங்கு கடைபிடிக்கப்படுவதால், சூழலை உணர்ந்து பொதுமக்கள் முன்கூட்டியே பொருட்களை வாங்கி வைத்துக் கொள்ள வேண்டும் என குறிப்பிட்ட அவர், அனைவரும் ஒரே நாளில் சென்று பொருட்களை வாங்குவதை தவிர்க்க வேண்டும் எனவும் வலியுறுத்தினார். குடும்ப அட்டைதாரர்களுக்கு ரேஷன் கடைகளில் முகக் கவசம் வழங்கும் பணி மிக விரைவில் தொடங்கும் எனவும், அமைச்சர் ஆர்.பி.உதயகுமார் கூறினார்.
Discussion about this post