இந்திய கண்டுபிடிப்பான கோவிட்-19 தடுப்பு மருந்து COVAXIN, “Double blind” முறையில் மனித பரிசோதனையின் முக்கிய கட்டத்தில் உள்ளது… Double blind முறை என்றால் என்ன? என்பது தொடர்பான தகவல்களை விளக்கமாக பார்க்கலாம்……
கொரோனா தொற்றை எதிர்த்துப் போராட உலகம் முழுவதும் தடுப்பூசி மருந்துக்கான ஆராய்ச்சியும், மனிதப் பரிசோதனைகளும் முழுவீச்சில் நடைபெற்று வருகின்றன.இந்திய கண்டுபிடிப்பான கோவிட்-19 தடுப்பு மருந்து COVAXIN-ஐ, மனிதர்களிடம் செலுத்தும் பரிசோதனை தற்போது தொடங்கியுள்ளது.
ஹைதராபாத்தைச் சேர்ந்த பாரத் பயோடெக், நிறுவனம் முதல் கோவிட்-19 தடுப்பூசி மருந்தான கோவாக்ஸினுக்கான (COVAXIN) முதல்கட்ட ஆராய்ச்சி நாடு முழுவதும் ஜூலை 15-ல் ஆரம்பித்தது. ஆராய்ச்சியின் போது ஒரு பிரிவினருக்கு, தடுப்பூசி மருந்து செலுத்தப்படும் மற்றொரு பிரிவினருக்கு மருந்தற்ற மருந்து செலுத்தப்படும். Double-blind முறையில் இந்த ஆராய்ச்சி மேற்கொள்ளப்படுவதாக கூறப்படுகிறது. அதாவது ஆராய்ச்சியில் ஈடுபட்டிருக்கும் ஆராய்ச்சியாளருக்கும், தன்னார்வலர்களுக்கும், யாருக்குத் தடுப்பூசி மருந்து அளிக்கப்படுகிறது யாருக்கு மருந்தற்ற மருந்து அளிக்கப்படுகிறது என்று அறியாமல் ஆராய்ச்சி மேற்கொள்ளும் முறை தான் Double blind முறை ஆகும்.
பாரத் பயோடெக் மற்றும் இந்திய மருத்துவ ஆராய்ச்சி கவுன்சிலின் கூட்டு முயற்சியில் உருவான கோவாக்ஸின் மற்றும் சைடஸ் காட்லியா சுகாதார நிறுவனத்தின் கண்டுபிடிப்பான தடுப்பூசி மருந்தையும் முதல்கட்ட மற்றும் இரண்டாம் கட்ட மனிதப் பரிசோதனைக்கு உட்படுத்த ஒப்புதல் வழங்கப்பட்டுள்ளது. இந்த இரு தடுப்பூசி மருந்துகளும் எலி, முயல் ஆகியவற்றுக்குச் செலுத்தப்பட்டு வெற்றிகரமான பரிசோதனையை முடித்ததையடுத்து தற்போது Double blind முறையில் மனிதப் பரிசோதனைக்கு ஒப்புதல் கிடைத்திருப்பதாக இந்திய மருத்துவ ஆராய்ச்சி கவுன்சில் தெரிவித்துள்ளது.இந்திய மருத்துவ ஆராய்ச்சி கவுன்சில் ( ICMR) இதுவரை 2 தடுப்பூசி மருந்துகளுக்கு மனிதப் பரிசோதனை மேற்கொள்ள ஒப்புதல் வழங்கியுள்ளது என்பது குறிப்பிடத்தக்கது…
COVAXIN தடுப்பூசி “Double blind” முறையில் மனித பரிசோதனையில் வெற்றி பெற்று கூடிய விரைவில் நடைமுறைக்கு வர வேண்டும் என்பதே அனைவரின் எதிர்ப்பார்ப்பாக உள்ளது.
Discussion about this post