வீட்டு மின் பயனீட்டாளர்கள் தங்களின் மின் கட்டண தொகைக்கான விவரங்களை இணையதளத்தில் தெரிந்துகொள்ளலாம் என அறிவிக்கப்பட்டுள்ளது.
தமிழ்நாடு மின் உற்பத்தி மற்றும் பகிர்மானக் கழகம் வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில், வீட்டு மின் பயனீட்டாளர்கள் தங்களின் மின் கட்டண தொகைக்கான விவரங்களை www.tangedco.gov.in என்ற இணையதளத்தில் தெரிந்துகொள்ளலாம் என தெரிவிக்கப்பட்டுள்ளது. முந்தைய மாத மின் கட்டண தொகையையே கணக்கீடு செய்யப்பட்டுள்ள நுகர்வோர்கள், பின்னர் அடுத்த கணக்கீட்டில் கணக்கிடப்பட்ட மொத்த தொகை எவ்வாறு கணக்கிடப்பட்டுள்ளது என்பதையும் தெரிந்துகொள்ளலாம் என குறிப்பிடப்பட்டுள்ளது. tangedco.gov.in என்ற இணையதளத்தின் வாயிலாக, கணக்கிடப்பட்ட மொத்த தொகையை கிளிக் செய்து முழு விவரங்களை அறிந்துகொள்ளலாம் எனவும், மின் நுகர்வோருக்கு மின் கணக்கீட்டு முறையில் ஏதேனும் சந்தேகம் இருந்தால், உதவி பொறியாளர் அலுவலகத்தை அணுகலாம் எனவும் குறிப்பிடப்பட்டுள்ளது.
Discussion about this post