அரசின் சிறப்பான நடவடிக்கையால், சென்னையில் கடந்த 18 நாட்களாக கொரோனா தொற்றின் அளவு குறைந்து வருவதாக தமிழ் வளர்ச்சித்துறை அமைச்சர் பாண்டியராஜன் தெரிவித்துள்ளார்.
சென்னை தண்டையார்பேட்டை மண்டலத்தில் “கொரோனா இல்லாத தண்டையார்பேட்டை” என்னும் திட்டத்தை அமைச்சர் பாண்டியராஜன் தொடங்கிவைத்தார். இத்திட்டம் குறித்து, மருத்துவர்கள், தொண்டு நிறுவனங்கள், தன்னார்வலர்கள், களப்பணியாளர்கள் ஆகியோரிடம் எடுத்துரைத்தார். பின்னர் செய்தியாளர்களிடம் பேசிய அமைச்சர் பாண்டியராஜன், தமிழக அரசின் சிறப்பான நடவடிக்கையால் சென்னையில் கொரோனா தொற்று தொடர்ந்து குறைந்து வருவதாகக் கூறினார்.கொரோனா சிகிச்சையில் உள்ளவர்கள், மாநில அளவில் சென்னையில் 70 சதவீதமாக இருந்த தொற்று, தற்போது, 29 சதவீதமாக குறைந்துள்ளதாகத் தெரிவித்தார். தண்டையார்பேட்டையை, ஜுலை 31-க்குள் கொரோனா இல்லா பகுதியாக மாற்ற திட்டமிட்டுள்ளதாகவும் கூறினார்.
Discussion about this post