தமிழகத்தில் நிறுவனங்கள் தொழில் தொடங்க ஒற்றைசாளர முறையில் உடனடியாக அனுமதி அளிக்கப்பட்டு வருவதாக முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி தெரிவித்துள்ளார்.
கிருஷ்ணகிரி மாவட்டத்தில் சுற்றுப்பயணம் மேற்கொண்டுள்ள முதலமைச்சர், மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் நடைபெற்ற சிறு குறு மற்றும் நடுத்தர தொழில் கூட்டமைப்பு நிர்வாகிகளுடன் கலந்தாய்வில் ஈடுபட்டார். கூட்டத்தில் பேசிய அவர், பல்வேறு தொழில் நிறுவனங்கள் தமிழகத்தில் தொழில் தொடங்க முனைப்பு காட்டி வருவதாகவும், அரசு அறிவித்துள்ள கட்டுப்பாடுகளை தொழில் கூட்டமைப்பினர் கடைபிடிக்க வேண்டும் என்றும் வலியுறுத்தினார். கொரோனா பரவல் தடுப்பு நடவடிக்கைகளை தொழிற்சாலைகள் பின்பற்ற வேண்டும் என முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி கேட்டுக் கொண்டார்.
Discussion about this post