கொரோனா பரவல் தடுப்பு நடவடிக்கைகளுக்கு மத்திய அரசு வழங்கிய நிதி போதுமானதாக இல்லை என்றும், கூடுதல் நிதியை வழங்க வேண்டும் எனவும் வருவாய்த்துறை அமைச்சர் ஆர்.பி.உதயகுமார் கேட்டுக்கொண்டுள்ளார்.சென்னை திருவொற்றியூர் மண்டலத்தில் கொரோனா தொற்று கண்டறியும் வாரம் கடைபிடிக்கப்பட்டு, இணை நோய் உள்ளவர்களுக்கு கொரோனா பரிசோதனை மேற்கொள்ளப்படுகிறது. இதனை துவக்கி வைத்த அமைச்சர் ஆர்.பி. உதயகுமார், பின்னர் செய்தியாளர்களிடம் பேசினார். அப்போது, ஆண்டுதோறும் தேசிய பேரிடர் நிவாரணம் மூலம் ஆயிரத்து 310 கோடி தமிழகத்திற்கு வரவேண்டிய தொகை என்றும், அதில் 510 கோடி ரூபாய் முதற்கட்டமாக வந்துள்ளதாகவும் கூறினார். கொரோனா தொற்று பரவல் தடுப்பு நடவடிக்கைக்காக தமிழகத்திற்கு 9 ஆயிரம் கோடி ரூபாயை மத்திய அரசு வழங்க வேண்டுமென அமைச்சர் உதயகுமார் கோரிக்கை விடுத்துள்ளார்.
Discussion about this post