தமிழகத்தில் 109 அரசு கலை மற்றும் அறிவியல் கல்லூரிகளில் ஆன்லைன் முலம் மாணவர் சேர்க்கை நடத்த உயர்கல்வித்துறை முடிவு செய்துள்ளது.
கொரோனா தடுப்பு நடவடிக்கையாக மாணவர்கள் அதிகளவு கூடுவதை தவிர்க்கும் வகையில் பிரத்யேக மென்பொருள் உருவாக்கும் பணிகளை தொழில்நுட்ப கல்வி இயக்குநரகம் மேற்கொண்டுள்ளது. பிரத்யேக மென்பொருள் மூலமாக மாணவர் சேர்க்கையை நடத்த முடிவு செய்யப்பட்டுள்ளது. அரசு கலை அறிவியல் கல்லூரிகளுக்கு மாணவர்கள் ஆன்லைன் மூலம் விண்ணப்பம் செய்த பின் இட ஒதுக்கீடு அடிப்பையில் கல்லூரியில் சேருவதற்கான அழைப்பு ஆணைகள் வழங்கப்பட்டு, மாணவர் சேர்க்கை நடத்தப்படும் எனவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.
Discussion about this post