சிபிஎஸ்இ 12ம் வகுப்பு தேர்வு முடிவுகள் வெளியிடப்பட்டுள்ளதாக மத்திய மனிதவள மேம்பாட்டுத்துறை அமைச்சர் ரமேஷ் பொக்ரியால் தெரிவித்துள்ளார். கொரோனா வைரஸ் பாதிப்பு காரணமாக சிபிஎஸ்இ தேர்வுகள் பாதியில் நிறுத்தப்பட்ட நிலையில், எஞ்சிய தேர்வுகள் ரத்து செய்யப்படுவதாகவும், ஜூலை 15ம் தேதி முடிவுகள் அறிவிக்கப்படும் என்றும் உச்சநீதிமன்றத்தில் சிபிஎஸ்இ தரப்பில் தெரிவிக்கப்பட்டது. இந்நிலையில், இரண்டு நாட்களுக்கு முன்னதாகவே, சிபிஎஸ்இ 12ம் வகுப்பு தேர்வு முடிவு இன்று வெளியானது. இத்தேர்வில் 88.78 சதவீத மாணவர்கள் தேர்ச்சி பெற்றதாக அறிவிக்கப்பட்டுள்ளது. cbse results. nic. in என்ற இணையதளத்தில் முடிவுகளை தெரிந்து கொள்ளலாம் என மத்திய அமைச்சர் ரமேஷ் பொக்ரியால் தெரிவித்துள்ளார். வரும் 15ம் தேதி சிபிஎஸ்இ 10ம் வகுப்பு தேர்வு முடிவுகள் வெளியாக உள்ளன.
Discussion about this post