கொரோனாவுக்கு இந்த ஆண்டுக்குள் மருந்து கண்டுபிடிக்கப்பட வாய்ப்பில்லை என அறிவியலுக்கான நாடாளுமன்ற நிலைக்குழு தெரிவித்துள்ளது.
கொரோனா வைரசுக்கு தடுப்பு மருந்து கண்டுபிடிக்கும் பணியில் உலக நாடுகள் தீவிரமாக ஈடுபட்டுள்ளன. காங்கிரஸ் மூத்த தலைவர் ஜெய்ராம் ரமேஷ் தலைமையிலான அறிவியல் மற்றும் தொழில்நுட்பத்துக்கான நாடாளுமன்றக்குழு கொரோனா வைரஸ் பாதிப்புக்கு பின், நேற்று முதன்முறையாக கூடியது. இந்நிலையில் 2021ம் ஆண்டு தொடக்கத்தில்தான் கொரோனா வைரசுக்கு தடுப்பூசி கிடைக்கும் என நாடாளுமன்றக்குழு தெரிவித்துள்ளது. ஊரடங்கு காரணமாக போக்குவரத்துக்கு பல்வேறு கட்டுப்பாடுகள் விதிக்கப்பட்டுள்ளதால், நேற்று நடைபெற்ற இக்கூட்டத்தில் 30 எம்பிக்கள் மட்டுமே பங்கேற்றனர்.
Discussion about this post