அரசு பள்ளி மாணவர்களுக்கு வரும் 13-ம் தேதி முதல் ஆன்லைன் மூலம் வகுப்புகள் நடத்தப்படும் என பள்ளிக்கல்வித்துறை அமைச்சர் செங்கோட்டையன் தெரிவித்துள்ளார்.
ஈரோடு மாவட்டம், கோபிச்செட்டிபாளையத்தில் செய்தியாளர்களை சந்தித்த அவர், மாவட்டம் தோறும்12-ம் வகுப்பு காலாண்டு, அரையான்டு தேர்வு எழுதாத மாணவர்கள் கண்டறியப்பட்டுள்ளதாக தெரிவித்தார். மேலும், 12-ம் வகுப்பில் இறுதித்தேர்வு எழுதாத 34,482 மாணவர்களில் 718 தேர்வு எழுத விருப்பம் தெரிவித்துள்ளதாகவும் அவர்களுக்கான தேர்வு தேதியை முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி இன்று மாலை அறிவிப்பார் என்றும் அவர் கூறினார். இதன் முடிவுகள் 4 நாட்களில் வெளியிடப்படும் என்றும் அமைச்சர் செங்கோட்டையன் கூறினார். இதர வகுப்பு மாணவர்களுக்கு ஒவ்வொரு பாடத்திற்கும் ஒரு சேனல் என 5 தொலைக்காட்சிகளில் ஒளிபரப்ப நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளதாகவும் தெரிவித்தார். நடப்பு கல்வியாண்டுக்கான பாட புத்தகங்கள் அனைத்தும் பள்ளிகளுக்கு கொண்டு சேர்க்கப்பட்டு விட்டதாக தெரிவித்த அவர், இவற்றை விரைவில் மாணவர்களுக்கு வழங்க நடவடிக்கை எடுக்கப்படும் என்றும் தெரிவித்தார்.
Discussion about this post