இந்தியாவில் நேற்று ஒரேநாளில், புதிய உச்சமாக 24 ஆயிரத்து 850 பேருக்கு கொரோனா தொற்று உறுதியாகியுள்ளது.
இந்தியாவில் கொரோனாவால் பாதிக்கப்பட்டோர் எண்ணிக்கை 6 லட்சத்து 73 ஆயிரத்து 165ஆக உயர்ந்துள்ளது. 2 லட்சத்து 44 ஆயிரம் பேர் சிகிச்சை பெற்று வருவதாகவும், 4 லட்சத்து 9 ஆயிரம் பேர் குணமடைந்து வீடு திரும்பியுள்ளதாகவும் மத்திய சுகாதாரத்துறை தெரிவித்துள்ளது.
கொரோனாவால் அதிகம் பாதிக்கப்பட்ட மகாராஷ்டிரா மாநிலத்தில், தொற்று எண்ணிக்கை 2 லட்சத்தை கடந்துள்ளது. தமிழகத்தில் 1 லட்சத்து 7 ஆயிரம் பேர் பாதிக்கப்பட்டுள்ளனர். அவர்களில் 60 ஆயிரத்து 592 பேர் குணமடைந்து வீடு திரும்பியுள்ளனர். டெல்லியில், 97 ஆயிரத்து 200 பேரும், குஜராத்தில் 35 ஆயிரத்து 312 பேரும், உத்தரப் பிரதேசத்தில் 26 ஆயிரத்து 554 பேரும் கொரோனா தொற்றுக்கு ஆளாகியுள்ளனர். தெலங்கானாவில் 22 ஆயிரத்து 312 பேரும், கர்நாடகாவில் 21 ஆயிரத்து 549 பேரும், மேற்கு வங்கத்தில் 21 ஆயிரத்து 231 பேரும் பாதிக்கப்பட்டுள்ளனர். இதேபோல், ராஜஸ்தான், ஆந்திராவிலும் பாதிப்பு அதிகமாக உள்ளது.
Discussion about this post