கொரோனாவை குணப்படுத்தும் தடுப்பு மருந்தை வரும் 7-ம் தேதி முதல் சோதனை முயற்சியாக பரிசோதிக்க இந்திய மருத்துவ ஆராய்ச்சி கவுன்சில் முடிவு செய்துள்ளது.கொரோனா வைரசை குணப்படுத்தும் மருந்தை கண்டுபிடிக்கும் பணி உலகம் முழுவதும் பல்வேறு நாடுகளில் தீவிரமடைந்து வருகிறது. இதன் ஒருபகுதியாக ஹைதராபாத்தை தலைமையிடமாக கொண்டு செயல்படும் பாரத் பயோடெக் நிறுவனம் கொரோனாவை குணப்படுத்தும் Covaxin எனும் மருந்தை கண்டுபிடித்துள்ளது. முதல்கட்டமாக இந்த மருந்தை விலங்குகளுக்கு செலுத்தி சோதனை செய்ததில் வெற்றி கிடைத்துள்ளது. இதனால் வரும் 7-ம் தேதி முதல் சோதனை முயற்சியாக கொரோனா நோயாளிகளிடம் இந்த மருந்து பரிசோதிக்கப்பட உள்ளது. சோதனை வெற்றி பெற்றால் வரும் அக்டோபர் 15-ம் தேதி கொரோனா சிகிச்சைக்கு இந்த தடுப்பு மருந்து பயன்படுத்தப்படும் என ICMR தெரிவித்துள்ளது. மேலும், திட்டமிட்டபடி சிகிச்சையை தொடங்க பரிசோதனை முயற்சியை விரைவுபடுத்துமாறு பாரத் பயோடெக் நிறுவனத்திற்கு ICMR உத்தரவிட்டுள்ளது.
Discussion about this post