திருப்பத்தூர் மாவட்ட வரைபடத்தை, 2 புள்ளி 740 மில்லி கிராம் தங்கத்தால் வடிவமைத்து நகைத் தொழிலாளி அசத்தியுள்ளார்.திருப்பத்தூர் மாவட்டம் ஆம்பூர் சான்றோர்குப்பம் பகுதியை சேர்ந்த தேவன், 35 ஆண்டுகளாக நகைத்தொழில் செய்து வருகிறார். இவர் குறைந்த அளவிலான தங்கத்தில் இந்திய வரைபடம், மகாத்மா காந்தி, அப்துல் கலாம், மறைந்த முதலமைச்சர்கள் எம்ஜிஆர், ஜெயலலிதா ஆகியோரின் உருவங்களை செய்துள்ளார். இந்த நிலையில், கொரோனா தடுப்பு பணியில் ஈடுபட்டு வரும் தூய்மைப் பணியாளர்கள், காவல் மற்றும் சுகாதாரத்துறையினரை ஊக்குவிக்கும் விதமாக, 1 புள்ளி 900 மில்லி கிராம் தங்கத்தில் கோவிட்-19, துடைப்பம், லத்தி, ஸ்டெதாஸ்கோப், முகக் கவசம் ஆகியவறஅறை வடிவமைத்து இருந்தார். அந்த வகையில் திருப்பத்தூர் மாவட்ட வரைபடத்தை, 2 கிராம் 740 மில்லி தங்கத்தில் செய்து தேவன் அசத்தியுள்ளார். நகைத்தொழிலாளி தேவனின் முயற்சியை ஆட்சியர் சிவனருள் மற்றும் பலர் பாராட்டி வருகின்றனர்.
Discussion about this post