கொரோனாவிற்கு மருந்து கண்டுபிடிக்கும் ரேஸில் தென்னிந்தியாவை தலைமையாகக் கொண்டு இயங்கும் பாரத் பயோடெக் நிறுவனம் வெற்றி பெறுமா? கொரோனா வைரஸ்க்கு மருந்து கண்டுபிடித்து உலகளவில் பெருமை பெறுமா? விளக்குகிறது சிறப்புத் தொகுப்பு…
கொரோனா எப்போ போறது? லாக்டவுன் எப்ப ரிலீஸ் ஆகுறது? பழையபடி, வழக்கமான வாழ்க்கையை எப்போ வாழறது?-ங்கறது தான் இப்போதைக்கு நம் எல்லாருடைய மனசிலும் இருக்கற ஒரே கேள்வி…
அதற்கு ஒரே தீர்வு மருந்து மட்டும்தான்… கொடூர கொரோனாவைத் தாக்கி அழிக்கும் மருந்து கண்டுபிடிக்கும் பந்தயத்தில் யார் முந்திக்கொண்டு அந்த பட்டத்தை வாங்கப்போகிறார்கள் என்பதுதான் மருத்துவ உலகில் தற்போதைய HotTalk ….
கொரோனாவிற்கு மருந்து கண்டுபிடிக்கும் பந்தயத்தில் தற்போது தென்னிந்தியாவை தலைமையிடமாகக் கொண்டு இயங்கும் பாரத் பயோடெக் நிறுவனம் முன்னேறி இருக்கிறது… கோவேக்ஸின் என்று பெயரிடப்பட்ட இந்த தடுப்பு மருந்தை மனிதர்களிடம் சோதிக்க இந்திய மருந்து கட்டுப்பாட்டு ஜெனரலிடம் இருந்து கிரீன் சிக்னல் வாங்கி இருக்கிறது இந்நிறுவனம்..
பாரத் பயோடெக், ஐசிஎம்ஆர் மற்றும் நேஷனல் இன்ஸ்டிடியூட் ஆப் வைராலஜி உடன் இணைந்து நடத்திய சோதனையில் இந்த தடுப்பு மருந்துகள் நல்ல பலனைத் தந்திருப்பதாக வயிற்றில் பால் வார்த்துள்ளனர் இந்நிறுவனத்தினர்…வீரியம் குறைந்த வைரஸை உடலுக்குள் செலுத்தி நம் உடலின் நோய் எதிர்ப்பு சக்தியை தூண்டுவதே இந்த தடுப்பு மருந்தின் முக்கிய அம்சம்..
ஏற்கனவே சீனாவின், கேன்சினோ என்ற மருத்துவ நிறுவனம் கொரோனா தடுப்பு மருந்தை கண்டறிந்தாலும் அதற்கான ஒப்புதலை இன்னும் அந்நாட்டின் இராணுவம் வழங்கவில்லை.
அதேபோல, லண்டனின் ஆக்ஸ்போர்ட் பல்கலைக்கழகம், இம்பீரியல் கல்லூரி, தென்ஆப்பிரிக்கா பல்கலைக்கழகம் என்று கொரோனா தடுப்பு மருந்து கண்டுபிடிக்கும் ரேஸில் பலரும் தீவிரமாக ஈடுபட்டு வரும் நிலையில், தென்னிந்தியாவில் இதற்கான மருந்து கண்டுபிடிக்கப்பட்டால் நிச்சயம் உலக வரலாற்றில் கொரோனாவை ஒழித்த பெருமை தென்னிந்தியாவிற்கே சேரும்….
Discussion about this post