687 இந்தியர்களுடன் ஈரான் நாட்டிலிருந்து புறப்பட்ட ஐ.என்.எஸ்.ஜலஸ்வா கப்பல் தூத்துக்குடி வந்தடைந்தது. ஊரடங்கு காலத்தில் வெளிநாட்டில் சிக்கித் தவித்த இந்தியர்களை அழைத்து வர மத்திய அரசு சமுத்திர சேது என்ற திட்டத்தின் கீழ் பல்வேறு நடவடிக்கைகளில் ஈடுபட்டு வருகிறது. இலக்கை, மாலத்தீவு உள்ளிட்ட பகுதிகளில் இருந்து ஆயிரத்திற்கும் மேற்பட்டோர் இந்தியா அழைத்து வரப்பட்டனர். அந்த வகையில், தற்போது ஈரானிலிருந்து 687 இந்தியர்கள் ஐ.என்.எஸ்.ஜலஸ்வா கப்பல் மூலம் தூத்துக்குடி வ.உ.சிதம்பரனார் துறைமுகம் வந்தடைந்தனர். தாயகம் வந்த இந்தியர்களை அமைச்சர் கடம்பூர் ராஜூ, ஆட்சியர் சந்தீப் நந்தூரி சட்டமன்ற உறுப்பினர்கள் ஆகியோர் வரவேற்றனர். கப்பலில் வந்த அனைவருக்கும் உடல் வெப்ப பரிசோதனை செய்யப்பட்டது. அவர்களது சொந்த ஊர்களுக்கு அனுப்பி வைக்க ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது.
Discussion about this post