கொரோனா தொற்று ஏற்பட்டதற்கும், உயிரிழப்புக்கும் யார் பொறுப்பு என்பதை விவாதம் செய்வதற்கான நேரம் இதுவல்ல என வருவாய்த்துறை அமைச்சர் ஆர்.பி.உதயகுமார் தெரிவித்துள்ளார்.சென்னை, திரு.வி.க. நகர் மண்டலத்திற்கு உட்பட்ட அயனாவரம் பகுதியில் கொரனோ தடுப்பு பணிகளில் ஈடுபடும் மாநகராட்சி ஊழியர்களுக்கு கபசுர குடிநீர் மற்றும் சத்து மாத்திரைகளை வருவாய்த்துறை அமைச்சர் ஆர்.பி. உதயகுமார் வழங்கினார். பின்னர் அங்குள்ள காய்ச்சல் முகாமை பார்வையிட்டு மருத்துவர்களிடம் அமைச்சர் ஆலோசனை நடத்தினார். பின்னர் செய்தியாளர்களை சந்தித்த அமைச்சர் ஆர்.பி.உதயகுமார், கொரோனா தடுப்புப் பணியில், மருத்துவர்கள், செவிலியர்கள், தூய்மை பணியாளர்கள், காவல்துறையினர் உள்ளிட்டோர் உயிரை பணயம் வைத்து சேவையாற்றி வருவதாக தெரிவித்தார். ஆனால், சிலர் வீட்டில் இருந்தபடியே அறிக்கை மூலம் அரசியல் செய்து வருவதாக அமைச்சர் சாடினார்.
Discussion about this post