வளிமண்டல மேலடுக்கு சுழற்சியால் அடுத்த 48 மணி நேரத்தில், 15 மாவட்டங்களில் லேசான மழைக்கு வாய்ப்புள்ளதாக வானிலை ஆய்வு மைய இயக்குனர் புவியரசன் தெரிவித்துள்ளார். கோவை, நீலகிரி, திருவண்ணாமலை உட்பட 7 மாவட்டங்களின் ஓரிரு இடங்களில் கனமழைக்கு வாய்ப்புள்ளதாகவும் அவர் கூறியுள்ளார். கேரள, கர்நாடக, லட்சத்தீவு, மாலத்தீவு கடலோரப் பகுதிகளில் மணிக்கு 50 கிலோ மீட்டர் வேகத்தில் காற்று வீசக்கூடும் என்பதால், அடுத்த 2 நாட்களுக்கு மீனவர்கள் அந்த பகுதிகளுக்கு செல்ல வேண்டாம் எனவும் வானிலை ஆய்வு மையம் எச்சரித்துள்ளது.
Discussion about this post