உலகளவில் கொரோனா வைரசால் பாதிக்கப்பட்டோர் எண்ணிக்கை ஒரு கோடியை தாண்டியது. நோய் தொற்றால் உயிரிழந்தோர் எண்ணிக்கை 5 லட்சத்தை கடந்தது.
அமெரிக்காவில் 25 லட்சத்து 96 ஆயிரத்திற்கும் அதிகமானோர் கொரோனாவால் பாதிக்கப்பட்டுள்ள நிலையில், ஒரு லட்சத்து 28 ஆயிரத்திற்கும் அதிகமானோர் உயிரிழந்துள்ளனர். பிரேசிலில் 13 லட்சத்து 15 ஆயிரத்திற்கும் மேற்பட்டோரும், ரஷ்யாவில் 6 லட்சத்து 27 ஆயிரத்திற்கும் மேற்பட்டோரும் நோய் தொற்றால் பாதிக்கப்பட்டுள்ளனர். இந்தியாவில் 5 லட்சத்து 8 ஆயிரம் பேரும், இங்கிலாந்தில் 3 லட்சத்து 10 ஆயிரம் பேரும், ஸ்பெயினில் 2 லட்சத்து 95 ஆயிரம் பேரும் நோய்த் தொற்றுக்கு ஆளாகியுள்ளனர். பெருவில் 2 லட்சத்து 75 ஆயிரம் பேரும், சிலியில் 2 லட்சத்து 67 ஆயிரம் பேரும் கொரோனாவால் பாதிக்கப்பட்டுள்ளனர். இதேபோன்று, இத்தாலி, ஈரான் போன்ற நாடுகளிலும் கொரோனாவின் தாக்கம் அதிகரித்த வண்ணம் உள்ளது. உலகம் முழுவதும் சுமார் 54 லட்சத்திற்கும் மேற்பட்டோர் நோய் தொற்றிலிருந்து குணமடைந்துள்ளனர்.
Discussion about this post