சென்னை, மதுரை உள்ளிட்ட மாவட்டங்களில் இன்று தளர்வு இல்லாத முழு ஊரடங்கு கடைபிடிக்கப்படுகிறது.
கொரோனா வைரஸ் பரவலை கட்டுப்படுத்தும் வகையில் சென்னை, திருவள்ளூர், செங்கல்பட்டு, காஞ்சிபுரம் ஆகிய மாவட்டங்களில் கடந்த 19ம் தேதி முதல் வரும் 30ம் தேதி வரை முழு ஊரடங்கு அமல்படுத்தப்பட்டுள்ளது. இதேபோல் தேனி, மதுரை ஆகிய மாவட்டங்களிலும் ஊரடங்கு அமலாகியுள்ளது. ஊரடங்கு அமல்படுத்தப்பட்ட இடங்களில் காலை 6 மணி முதல் பிற்பகல் 2 மணி வரை கடைகளை திறந்திருக்க அனுமதி வழங்கப்பட்டுள்ளது. எனினும், ஞாயிற்றுக்கிழமைகளில் தளர்வுகள் இல்லாத ஊரடங்கு கடைபிடிக்கப்படும் என அறிவிக்கப்பட்டது. இதனால் இன்று பால் விநியோகம், மருந்து கடைகள், மருத்துவமனை வாகனங்கள் தவிர வேறெந்த செயல்பாடுகளுக்கும் அனுமதியில்லை. பொதுமக்கள் வெளியே வராமல் வீடுகளில் இருந்து ஒத்துழைப்பு வழங்க வேண்டும் என சுகாதாரத்துறை கேட்டுக் கொண்டுள்ளது.
Discussion about this post