புதுச்சேரி மாநிலத்தில் இதுவரை இல்லாத அளவில் ஒரே நாளில் 87 நபர்களுக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளதாக சுகாதாரத்துறை இயக்குனர் மோகன்குமார் தெரிவித்துள்ளார்.புதுச்சேரியில் 72 நபர்களும், காரைக்காலில் 15 நபர்களும் என மொத்தம் புதுச்சேரில் 82 பேர் கொரோனாவால் பாதிக்கப்பட்டுள்ளதாக அம்மாநில சுகாதாரத்துறை இயக்குனர் மோகன்குமார் தெரிவித்துள்ளார். மேலும் மருத்துவமனையில் 388 பேர் சிகிச்சை பெற்று வருவதாகவும், 221 பேர் சிகிச்சை பெற்று வீடு திரும்பியுள்ளதாகவும் தெரிவித்த அவர், கொரோனாவால் நேற்று 82 வயது மூதாட்டி உயிரிழந்தை தொடர்ந்து பலி எண்ணிக்கை 10 ஆக அதிகரித்துள்ளதாக கூறினார்.
Discussion about this post