கொரோனா தொற்றின் இரண்டாவது அலை வீசும் அபாயம் உள்ள நாடுகளின் பட்டியலை லண்டனில் உள்ள ஆக்ஸ்போர்டு பல்கலைக்கழகம் வெளியிட்டுள்ளது.
பல்வேறு நாடுகளில் கொரோனாவின் தாக்கம் குறையாத நிலையில், அதன் இரண்டாவது அலை ஒரு சில நாடுகளில் துவங்கியுள்ளது. வைரஸ் தாக்கம் குறைந்து வருவதால் சில நாடுகள் ஊரடங்கில் தளர்வுகள் அளிக்கப்பட்டு வருகின்றன. இந்நிலையில் லண்டனின் ஆக்ஸ்போர்டு பல்கலைக்கழகம் உலக நாடுகளின் புள்ளி விவரங்களை கொண்டு கொரோனாவின் இரண்டாவது அலை வீசும் நாடுகளின் பட்டியலை வெளியிட்டுள்ளது. அதில் அமெரிக்கா, ஈரான், ஜெர்மனி, சுவிட்சர்லாந்து நாடுகளில் கொரோனாவின் இரண்டாவது அலை வீசக்கூடும் எனவும், உக்ரைன், வங்கதேசம், பிரான்ஸ், சுவீடன் மற்றும் இந்தோனேசியாவில் இரண்டாவது அலைக்கான அறிகுறிகள் இருப்பதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது. இப்பட்டியலில் இந்தியா இடம்பெறாதது இந்தியர்கள் இடையே சற்று நிம்மதியை ஏற்படுத்தியுள்ளது.
Discussion about this post