தமிழகத்தில் கொரோனா தொற்றால் பாதிக்கப்பட்டவர்களின் விவரங்களை சுகாதாரத்துறை வெளியிட்டுள்ளது. அதன்படி, கொரோனா பாதிப்பு 62 ஆயிரத்து 87 ஆக உயர்ந்துள்ளது. வெளிநாடு மற்றும் வெளிமாநிலங்களில் இருந்து தமிழகம் திரும்பிய 58 பேருக்கு பாதிப்பு உறுதியாகியுள்ளது. புதிதாக கொரோனா பாதித்த இரண்டாயிரத்து 710 பேரில், ஆயிரத்து 742 பேர் ஆண்கள், 968 பேர் பெண்கள்.
சென்னையில் இன்று ஆயிரத்து 487 பேருக்கு நோய் தொற்று உறுதியாகியுள்ள நிலையில், மொத்த பாதிப்பு 42 ஆயிரத்து 752 ஆக அதிகரித்துள்ளது. மதுரையில் 157 பேருக்கும், திருவண்ணாமலையில் 139 பேருக்கும், செங்கல்பட்டில் 126 பேருக்கும், திருவள்ளூரில் 120 பேருக்கும் கொரோனா உறுதிப்படுத்தப்பட்டுள்ளது. சென்னையைத் தவிர பிற மாவட்டங்களில் ஆயிரத்து 223 பேருக்கு புதிதாக நோய்த்தொற்று ஏற்பட்டுள்ளது.
கொரோனா பாதிப்பிலிருந்து ஆயிரத்து 358 பேர் மீண்டதையடுத்து, குணமடைந்தோர் சதவிகிதம் 55ஆக உள்ளது. இதன் மூலம் கொரோனா பாதிப்பிலிருந்து குணமடைந்தோரின் எண்ணிக்கை 34 ஆயிரத்து 112 ஆக உயர்ந்துள்ளது. சிகிச்சையில் 27 ஆயிரத்து 863 பேர் உள்ளதாக சுகாதாரத்துறை தெரிவித்துள்ளது. தமிழகத்தில் இன்று மட்டும் 26 ஆயிரத்து 592 மாதிரிகள் சேகரிக்கப்பட்டு பரிசோதனை மேற்கொள்ளப்பட்டுள்ளது.
Discussion about this post