லடாக் பகுதியில் சீனா அத்துமீறினால் பதிலடி கொடுக்க தயாராக இருக்குமாறு, ராணுவத்திற்கு பாதுகாப்புத்துறை அமைச்சர் ராஜ்நாத் சிங் உத்தரவிட்டுள்ளார். எல்லையில் பாதுகாப்பு ஏற்பாடுகள் குறித்து, பாதுகாப்புத்துறை அமைச்சர் ராஜ்நாத் சிங் அவசர ஆலோசனை நடத்தினார். இதில், தலைமைத் தளபதி மற்றும் முப்படைத் தளபதிகள் பங்கேற்றனர். இந்தக் கூட்டத்தில், லடாக் பகுதியில், சீன ராணுவத்தின் அத்துமீறல்கள் குறித்து விவாதிக்கப்பட்டன. அப்போது, எல்லையில் சீனப் படைகளின் நடமாட்டத்தை கண்காணிக்குமாறு ராணுவ அதிகாரிகளுக்கு ராஜ்நாத் சிங் உத்தரவிட்டுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. தரை, வான்வழி, கடல் பகுதிகளில் சீன ராணுவனத்தினரின் நடமாட்டத்தை கண்காணிக்க வேண்டும் என்றும் அவர் அறிவுறுத்தினார். சீன ராணுவம் அத்துமீறினால் இந்திய ராணுவ வீரர்கள் பதிலடி கொடுக்க தயாராக இருக்க வேண்டும் என்றும் இதற்காக, ராணுவ வீரர்களுக்கு முழு அதிகாரம் வழங்கப்பட்டுள்ளதாகவும் ராஜ்நாத்சிங் கூறினார்.
Discussion about this post