புதுச்சேரியில் போலி ஹாலோகிராம் தயாரித்து மதுபானம் விற்பனை செய்யும் மதுபான தொழிற்சாலைகள் மீது சிபிஐ விசாரணை நடத்த உத்தரவிட வலியுறுத்தி துணைநிலை ஆளுநர் கிரண்பேடியை சந்தித்து அதிமுக சட்டமன்ற கட்சித்தலைவர் அன்பழகன் மனு அளித்தார். புதுச்சேரியில் இயங்கி வரும் தனியார் மதுபான தொழிற்சாலைகளில் போலி ஹாலோகிராம் தயாரித்து மது விற்பனை செய்து அரசுக்கு பல கோடி ரூபாய் இழப்பு ஏற்படுத்தியதாக கடந்த ஒரு மாதத்தில் இரண்டு தனியார் மதுபான தொழிற்சாலைகளுக்கு சீல் வைக்கப்பட்டது. இது தொடர்பான வழக்கு சிபிசிஐடி காவல்துறையினரிடம் ஒப்படைக்கப்பட்டது. இந்நிலையில், இவ்வழக்கை சிபிஐ விசாரணைக்கு மாற்றக்கோரி துணைநிலை ஆளுநர் கிரண்பேடியை சந்தித்து அதிமுக சட்டமன்ற கட்சித் தலைவர் அன்பழகன் மனு அளித்தார். பின்னர் செய்தியாளர்களிடம் பேசிய அன்பழகன், போலி ஹாலோகிராம் தயாரித்து மதுவிற்பனையால் அரசுக்கு ஆண்டுக்கு 500 கோடி ரூபாய்க்கு மேல் இழப்பு ஏற்பட்டுள்ளதாக குற்றம்சாட்டினார்.
Discussion about this post