அரிய வானியல் நிகழ்வான கங்கண சூரிய கிரகணம் வரும் 21ம் தேதி நிகழவுள்ள நிலையில் வெறும் கண்களால் இதனை பார்க்கவேண்டாம் என அறிவுறுத்தப்பட்டுள்ளது. சென்னை கோட்டூர்புரத்தில் உள்ள பிர்லா கோளரங்கத்தின் இயக்குநர் சவுந்தர்ராஜன் நியூஸ் ஜெ தொலைகாட்சிக்கு அளித்த பேட்டியில், இந்த சூரிய கிரகணம் ஒரு அரிய வானவியல் நிகழ்வு என்றும், இதற்கு முன்பு 2010-ம் ஆண்டு ஜனவரி மற்றும் 2019ம் ஆண்டு டிசம்பர் மாத்தில் நிகழ்ந்துள்ளதாகக் கூறினார். வரும் 21-ம் தேதி நிகழும் இந்த கிரகணம் சென்னையில் காலை 10.22 மணி முதல் 11.58 மணி வரை காணலாம் என்றும், வெறும் கண்கள் மற்றும் தொலைநோக்கி வழியாக இதனை பார்க்ககூடாது என்றும் அறிவுறுத்தினார். மீண்டும் இதே போன்று கிரகணத்தை 2031 மே மாதம் தான் இந்தியாவில் காண முடியும் என்றும் தெரிவித்தார்.
Discussion about this post