தென்மேற்கு பருவக்காற்று மற்றும் வெப்பச் சலனத்தால், தமிழகத்தில் அடுத்த 48 மணி நேரத்தில் 11 மாவட்டங்களில் லேசான மழைக்கு வாய்ப்புள்ளதாக சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது. இது குறித்து வானிலை ஆய்வு மையம் வெளியிட்டுள்ள அறிக்கையில், கோவை, நீலகிரி, தேனி, தஞ்சாவூர், திருவாரூர், நாகப்பட்டினம், புதுக்கோட்டை, சிவகங்கை, ராமநாதபுரம், விழுப்புரம், திருவள்ளூர் ஆகிய மாவட்டங்களில் ஓரிரு இடங்களில் லேசானது முதல் மிதமான மழை பெய்யக்கூடும் என தெரிவிக்கப்பட்டுள்ளது. சென்னையை பொறுத்தவரை மாலை நேரங்களில் வானம் மேகமூட்டத்துடன் காணப்படும் எனவும், நகரின் ஓரிரு இடங்களில் லேசான மழை பெய்யக்கூடும் எனவும் கூறப்பட்டுள்ளது. கர்நாடகா, கோவா மற்றும் மகாராஷ்டிரா கடலோர பகுதிகளில் 50 கிலோ மீட்டர் வேகத்தில் காற்று வீசக்கூடும் என்பதால், இந்தப் பகுதிகளுக்கு மீன்வர்கள் செல்ல வேண்டாம் என எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.
Discussion about this post