ஐ.நா.பாதுகாப்பு கவுன்சிலின் 2021-2022ஆம் ஆண்டுக்கான, தற்காலிக உறுப்பினர்களுக்கான தேர்தலில் இந்தியா வெற்றி பெற்றுள்ளது. ஐ.நா. பாதுகாப்பு கவுன்சிலில் ஐந்து தற்காலிக உறுப்பினர்களுக்கான தேர்தல் நியூயார்க்கில் உள்ள ஐ.நா. தலைமையகத்தில் நடைபெற்றது. இதில், ஆசிய – பசிபிக் பிராந்தியத்துக்கான இடத்திற்கு, இந்தியா போட்டியிட்டது. தேர்தலில், 184 உறுப்பு நாடுகள் இந்தியாவுக்கு ஆதரவாக வாக்குளித்தன. தேர்தலுக்கு முன்பே ஆசிய – பசிபிக் பிராந்தியத்தை சேர்ந்த சீனா, பாகிஸ்தான் உட்பட 55 நாடுகள் இந்தியாவிற்கு ஆதரவு அளித்த நிலையில், தற்போது ஆசிய – பசிபிக் பிராந்திய நாடுகள் உட்பட 184 உறுப்பு நாடுகள் ஆதரவு அளித்துள்ளதால் தற்காலிக உறுப்பினர்களுக்கான தேர்தலில் இந்தியா பெற்றதாக அறிவிக்கப்பட்டது.
Discussion about this post