முழு ஊரடங்கு பிறப்பிக்கப்படும் சென்னை உட்பட 4 மாவட்டங்களில் வசிக்கும் அரிசி குடும்ப அட்டைத்தாரர்களுக்கு, ஆயிரம் ரூபாய் வரும் 22 ஆம் தேதி முதல் வீடு வீடாக சென்று வழங்கப்படுமென உணவுத்துறை அமைச்சர் காமராஜ் தெரிவித்துள்ளார்.
இது தொடர்பாக அவர் வெளியிட்டுள்ள அறிக்கையில், கொரோனா பரவலை தடுக்க வரும் 19 ஆம் தேதி முதல் 30 ஆம் தேதி வரை 12 நாட்களுக்கு சென்னை, திருவள்ளூர், செங்கல்பட்டு, காஞ்சிபுரம் மாவட்டங்களில் முழு ஊரடங்கு அமல்படுத்தப்பட உள்ளதாக குறிப்பிட்டுள்ளார். இந்த பகுதிகளில் வசிக்கும் அரிசி குடும்ப அட்டைத்தாரர்களுக்கும் நிவாரணத் தொகையாக தலா ஆயிரம் ரூபாய் வழங்க முதலமைச்சர் உத்தரவிட்டுள்ளதன் அடிப்படையில் வரும் 22 ஆம் தேதி முதல் வீடு வீடாக சென்று வழங்க ஆணையிட்டுள்ளதாக தெரிவித்துள்ளார். இதனை செயல்படுத்தும் விதமாக வரும் 22 ஆம் தேதி முதல் 26 ஆம் தேதி வரை சம்பந்தப்பட்ட ரேஷன் கடை பணியாளர்கள் மூலமாக வீடு வீடாக சென்று காலை 8 மணி முதல் மாலை 6 மணி வரை ஆயிரம் ரூபாய் வழங்கப்படமென குறிப்பிட்டுள்ளார். எனவே, வரும் 22 ஆம் தேதி முதல் 26 ஆம் தேதி வரை 5 நாட்கள் ரேஷன் கடைகள் செயல்படாது என்றும், ஜூன் மாதத்திற்கான அத்தியாவசிய பொருட்களை பெறாத 22 சதவிகிதம் பேர், வரும் 27 ஆம் தேதி முதல் பெற்றுக் கொள்ளலாம் என அமைச்சர் காமராஜ் தெரிவித்துள்ளார்.
Discussion about this post